ஆர்லாண்டோ தமிழ் மன்றம் - துளிர்கள்
துளிர்கள் 2019     துளிர்கள் 2018     துளிர்கள் 2017    


துளிர்கள் 2018



ஆர்லாண்டோ தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் சார்ந்த போட்டிகள்

கீழ்கண்ட போட்டிகள் ஆர்லாண்டோ வாழ் தமிழ் குழந்தைகளுக்கு இடையே தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
இதில் ஆர்லாண்டோ முழுவதிலிருந்தும் 37 குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
"போட்டி / வயது வரம்பு " அரும்புகள் (4-6 வயது)
Winner Runner Up
ஓவியம் Karthick Solaiyappan Natesh Siddhesh Saravanan
கட்டுரை Adwitha Mungundu Prasath
பேச்சு Siddhesh Saravanan
சிறுகதை Siddhesh Saravanan Madhesh Sarathy
திருக்குறள் Adwitha Mungundu Prasath Raaghav Selvaperumal
Siddhesh Saravanan
கவிதை Adwitha Mungundu Prasath

"போட்டி / வயது வரம்பு " மொட்டுகள் (7-10 வயது)
Winner Runner Up
ஓவியம் Rohit Madhav Palani Anisha Jagan
கட்டுரை Anisha Jagan
பேச்சு Abinandh Parthiban Balaswathi John Kennedy
சிறுகதை Abinandh Parthiban Anagha Ananth
திருக்குறள் Abinandh Parthiban Anagha Ananth
கவிதை Anagha Ananth Abinandh Parthiban

"போட்டி / வயது வரம்பு " முகைகள் (11-14 வயது)
Winner Runner Up
ஓவியம் Nivedha Srinivasan Shivani Sivasamy
கட்டுரை Shivani Sivasamy Nivedha Srinivasan
பேச்சு Shinika Nandakumar Barath Balaji
சிறுகதை Shivani Sivasamy Niyathi Coumar
திருக்குறள் Badri Nagarajan Srinivas Selva
கவிதை Shinika Nandakumar Shivani Sivasamy



போட்டி விவரம்
போட்டி / வயது வரம்பு அரும்புகள் - 4-6 வயது மொட்டுகள் - 7-10 வயது முகைகள் – 11 - 14 வயது மலர்கள் – 15 - 18 வயது
கட்டுரை போட்டி என் பொம்மை என்ற தலைப்பில் குறைந்தபட்சம் 4 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை 45 நிமிடங்களுக்குள் எழுதவும் என் பொழுதுபோக்கு என்ற தலைப்பில் குறைந்தபட்சம் 7 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை 45 நிமிடங்களுக்குள் எழுதவும் என் கனவு உலகம் என்ற தலைப்பில் குறைந்தபட்சம் 10 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை 45 நிமிடங்களுக்குள் எழுதவும் என் கனவு வேலை என்ற தலைப்பில் குறைந்தபட்சம் 12 வாக்கியங்களில் ஒரு கட்டுரையை 45 நிமிடங்களுக்குள் எழுதவும்
கவிதை போட்டி தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – கவிதை நடையில் 7 நிமிடத்திற்குள் சொல்லவும் காக்கை சிறகினிலே – கவிதை நடையில் 7 நிமிடத்திற்குள் சொல்லவும் செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஏதாவது 5 அடிகளை கவிதை நடையில் 7 நிமிடத்திற்குள் சொல்லவும் இயற்கைஎன்ற தலைப்பில், 10 முதல் 15 வரிக்குள் சொந்த கவிதை ஒன்றை முன்கூட்டியே தயார் செய்து வந்து கவிதை நடையில் 7 நிமிடத்திற்குள் சொல்லவும்
பேச்சு போட்டி என் குடும்பம் என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும் என்னை கவர்ந்த தமிழ்நாட்டுத் தலைவர் என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும் குறைந்து வரும் நீர் வளத்தை மேம்படுத்துவதில் உனது பங்கு என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும் உன்னை பாதித்த சமூகப் பிரச்சினை எது? அதைக் கலைவ தற்கு உன் யோசனைகள் என்ன? என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேசவும்
சிறுகதை போட்டி வளைந்த மரம் (a story in Nillai 2) போன்ற ஏதாவது ஒரு கருத்துள்ள சிறுகதையை 5 நிமிடத்திற்குள் சொல்லவும் ஒரு ஊரில் ஒரு அழகான குழந்தை, அந்த குழந்தையின் பெயர் மலர் அவளுக்கு ஒரு அதிசய சக்தி உண்டு… - இந்த வாக்கியத்தை தொடர்ந்து ஒரு சிறுகதையை முன்கூட்டியே தயார் செய்து வந்து 10 நிமிடத்திற்குள் சொல்லவும். சிறுகதைக்கு தலைப்பும் கொடுக்கவும். சேகரும் செந்திலும் சிறந்த நண்பர்கள். அவர்கள் இருவரும் பயணத்திற்கு தயாராகி விட்டனர்… - இந்த வாக்கியத்தை தொடர்ந்து ஒரு சிறுகதையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 10 நிமிடத்திற்குள் சொல்லவும். சிறுகதைக்கு தலைப்பும் கொடுக்கவும். நேரம் பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருந்தது. கார்த்திக் மனதில் ஒரு மெல்லிய நடுக்கம்... - இந்த வாக்கியத்தை தொடர்ந்து ஒரு சிறுகதையை முன்கூட்டியே தயார் செய்துவந்து 10 நிமிடத்திற்குள் சொல்லவும். சிறுகதைக்கு தலைப்பும் கொடுக்கவும்.
ஓவிய போட்டி என் குடும்பம என்ற தலைப்பில் ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும் உன் கிராமத்து சூழலை சித்தரிக்கும் வகையில் ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும் தமிழ்நாட்டை பாதிக்கும் ஏதாவது ஒரு சமூக பிரச்சினையை (வெள்ள நிவாரணம், உழவு தொழிலாளர்கள், சுத்தமான நகரம், ஜல்லிக்கட்டு போன்ற) சித்தரிக்கும் வன்கையில் தமிழில் தலைப்புடன் ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும் உங்களுக்கு பிடித்த தமிழ்நாடு சார்பான கலாச்சார நடனத்தை சித்தரிக்கும் ஒரு ஓவியத்தை 45 நிமிடத்திற்குள் வரையவும்
திருக்குறள் மனனப் போட்டி ஏதேனும் 5 குறள்களை மனப்பாடமாக கூறவும் “அன்புடைமை”, “வாய்மை” - இந்த இரண்டு அதிகாரங்களிலிருந்து ஒரு அதிகாரத்திலுள்ள 10 குறள்களை கூறவும் “செய்ந்நன்றி அறிதல்”, “புகழ்”, “அன்புடைமை” – இந்த மூன்று அதிகாரங்களிலிருந்து ஏதேனும் 2 அதிகாரத்திலுள்ள 20 குறள்களை கூறவும் “செய்ந்நன்றி அறிதல்”, “புகழ்”, “அன்புடைமை” – இந்த மூன்று அதிகாரங்களிலிருந்து ........என தொடங்கும், ..........என முடியும் 5 குறள்கள் ஒவ்வொன்றயும் 20 வினாடிகளுக்குள் கூறவும்


போட்டி இடம்பெற்ற நாள்: 06-May-2018
நேரம்: 10:00 AM
இடம்: University of Central Florida, Orlando 32837

தொடர்பு:
ராஜ் கிருஷ்ணசாமி +1 678 358 3106
விஜய் செந்தில் +1 510 809 7671


போட்டிகளுக்கான குறிப்புகள்:
குழந்தைகள் போட்டிகளுக்கு தேவையான பொருள்களை (தாள்கள், எழுதுகோல், வண்ணகோல்கள், இதர பிற) கொண்டு வரவும்
சரியான நேரத்திற்கு போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து தங்கள் வரவை பதிவு செய்யவும்
போட்டிக்கான முடிவுகள் தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு 10 நாட்களுக்குள் அனுப்பிவைக்கப்படும்